நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!

by wp_fhdn

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, கெளரவ சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

Related

Tags: athavannewslkanewsPresidentTrump Inaugurationupdate

தொடர்புடைய செய்திகள்