பியரின் விலையும் உயர்வு

by adminDev2

மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மதுவரி 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.

சராசரியாக மதுபான போத்தல் ஒன்றின் விலை 6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

தொடர்புடைய செய்திகள்