6
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சியினர் ! on Saturday, January 11, 2025
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர்.
இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது