by adminDev

காலனி ஆதிக்கத்தால் குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டது: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி கருத்து இந்திய கல்வி முறையை மாற்று​வதற்​காகவே தேசிய புதிய கல்விக்​கொள்கை கொண்டு​வரப்​படு​கிறது என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.

அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்​பில், தென்​மண்டல அளவிலான துணைவேந்​தர்கள் மாநாடு வேலூர் விஐடி பல்கலை.​யில் நேற்று தொடங்​கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்​டின் தொடக்க விழா​வில் ஆளுநர் ஆர்.என்​.ரவி பேசி​ய​தாவது: புதிய கல்விக் கொள்கை மாற்​றத்​துக்​காகவே கொண்டு​வரப்​படு​கிறது. மனப்​பாடம் செய்​தல், கற்றல், தேர்வு முறை போன்ற​வற்றை மாற்றியமைக்​கிறது. நாட்டை மாற்றியமைக்க இது அவசி​ய​மாகும்.

ஆங்கிலேய காலனி ஆதிக்​கத்​தால் நமது கற்றல், கற்பித்தல் மாறி​விட்​டது. 18-ம் நூற்​றாண்டு வரை இந்தியா, உலக பொருளா​தா​ரத்​தில் முன்னிலை​யில் இருந்​தது. ரோமானியப் பேரரசு முதல் சீனா வரை நமது சந்தைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் நமது அறிவியல், கணிதம் பற்றி தெரிந்​து​கொண்​டனர். பின்னர், மேற்​கத்திய சிந்​தனை​களு​டன், அவர்​களுக்கு சேவை செய்​யும் வகையில் பாரம்​பரிய கல்வி முறையை மாற்றியமைத்​தனர்.

ஆனால், சுதந்​திரத்​துக்​குப் பிறகும் அந்தக் கல்வி முறையை நாம் பின்​பற்றுவது துரதிர்​ஷ்ட​வச​மானது. குருகுல கல்வி முறை​யில் எந்தக் கட்டுப்​பாடும் இருந்​த​தில்லை. ஆனால், காலனி ஆதிக்​கத்​தால் குரு​குலக் கல்வி முறை மாற்​றப்​பட்​டது. அறிவை உற்பத்தி செய்​யும் நமது பாரம்​பரி​யத்தை இழந்​து​விட்​டோம். எனவே​தான், முந்தைய கல்வி முறைக்​குத் திரும்ப முயற்சிக்​கிறோம். இது ஆராய்ச்சி மற்றும் புது​மையான கண்டு​பிடிப்பு​களுடன் இணைக்​கப்​பட்​டுள்​ளது. மாநில பல்கலைக்​கழகங்​கள், தனியார் பல்கலைக்​கழகங்​களைவிட தரத்​தில் பின்​தங்கி இருப்பது ஏன்? தொழில்​நுட்பத் துறை​யில் இன்னும் வளர வேண்​டும். ஆராய்ச்சி மற்றும் கண்டு​பிடிப்புகளை கல்வி​யின் ஒரு பகுதியாக இணைக்க வேண்​டும். ஆசிரியர்​களுக்கான மதிப்​பீடு​களும் இருக்க வேண்​டும்.

இந்தியப் பொருளா​தாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் விதியை மாற்றியமைக்​கும் நாடாக இந்தியா மாற வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்​போது, “இந்தியா​வில் 55 ஆயிரம் கல்லூரி​களும், 1,200 பல்கலைக்​கழகங்​களும் இருந்த​போ​தி​லும், ஆராய்ச்​சி​யில் நாம் பின்​தங்கி உள்ளோம். கல்விக்கு போதுமான நிதி ஒதுக்​கப்​படு​வ​தில்லை. இந்நிலை மாற வேண்​டும். கல்விக் கொள்​கை​யில் எந்த அரசின் குறிக்​கீடும் இருக்கக் கூடாது. ஆராய்ச்​சிகளுக்கு அதிக நிதி ஒதுக்​கீடு செய்ய வேண்​டியது அவசி​யம்” என்றார்.

அகில இந்திய பல்கலைக்கழக சங்கத் தலைவர் வினய்​கு​மார் பதக், பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்​டல், துணைத் தலைவர் வி.என்​.ராஜசேகரன் பிள்ளை, விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், துணைவேந்​தர் ​காஞ்சனா பாஸ்​கரன், இணை துணைவேந்​தர் பார்த்​தசா​ரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

தொடர்புடைய செய்திகள்