இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
இலங்கை அணிசார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும்,ஜனித் லியனகே 53 ஓட்டங்களையும் அதிகபட்டசமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 4 விக்கெட்டுகளை அதிகபட்டசமாக கைப்பற்றினார்.
291 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 29.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது