2
கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததால் கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ! on Saturday, January 11, 2025
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கோட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொள்கலன் சோதனைகளுக்கான இடம் மற்றும் வசதிகள் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது தினமும் 1,500 முதல் 3,000 வரையான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் 35% முதல் 40% வரையான கொள்கலன்கள் சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், ஏனையவைகள் மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.