அமெரிக்க நகரமான அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது ஏறக்குறைய 200 பேர் டெல்டா விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்டா நிறுவனத்தின் போயிங் 757-300 விமானம் ஓடுபாதையில் புறப்பட முற்பட்டபோது விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்து சறுக்கியதாகக் கூறப்படுகிறது.
விமானத்திலிருந்து 200 பேரும் அவசரமாக வெளியேறும் கதவின் சறுக்கி ஊடாக வெளியேற்றப்பட்டனர்.
நான்று பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஏனையவர்களுக்கு சம்பவ இடத்தில் சிகிற்சைகள் வழங்கப்பட்டன.
போயிங் 757-300 இன்ஜின் பிரச்சனை இருந்தது. இந்த சம்பவம் தற்போது விசாரணையில் உள்ளது. எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை, இந்த அனுபவத்திற்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.