பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு ! on Saturday, January 11, 2025
கிழக்கு மாகாண சபையின் விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான 5 நாள் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்தோருக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், கிழக்கு மாகாண ச!க சேவைகள் திணைக்கள பணிப்பாளர் யூ.சிவராசா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஉல் ஹக், ச!கசேவை உத்தியோகத்தர்களான ஏ.நஜீம், எஸ்.ஜெயசேகர், எம்.சிவலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி, வாழைச்சேனை கிரான், செங்கலடி, கோறளைப்பற்று மத்தி மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை சேர்ந்த 19 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன