லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது 10 பேர் இறந்தது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட வீடுகள் என கட்டமைப்புகளை அழித்துள்ளது. 1,00,000 மேற்பட்டோர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் ஐந்து இடங்களில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பாலிசேட்ஸ் , ஈடன் , கென்னத் , ஹர்ஸ்ட் மற்றும் லிடியா போன்ற இடங்களிலேயே தீ எரிகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறைத் திணைக்களம், கென்னத் தீ வேண்டுமென்றே பற்றவைக்கப்பட்டதாக நம்புவதால், தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை சந்தேகத்தின் பெயரில் 20 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்களை நகர மேயர் எச்சரித்தார்.
தீயணைப்பு வீரர்கள் பாலிசேட்ஸ் தீயில் 6% கட்டுப்படுத்த முடிந்ததாகக் கூறினர். செவ்வாய்கிழமை முதலில் தீ பற்றியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 20,000 ஏக்கருக்கு தீ பரவியது.
இன்றும் அடுத்த வாரமும் அதிக சக்தி வாய்ந்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது லாஸ் வேகாஸ் மற்றும் வென்ச்சுரா மாவட்டங்களில் தீயை தொடர்ந்து பாதிக்கும் எனக் கூறுப்படுகிறது.
தெற்கு கலிபோர்னியாவில் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கான முழு செலவையும் மத்திய அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஈடுசெய்யும் என்று ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார்.
ஒரு தன்னார்வத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காட்டுத்தீ பரவுவதை அணைக்க கிட்டத்தட்ட 800 கைதிகள் CalFire உடன் பயணியாற்றுவதாக கலிஃபோர்னியாவின் சீர்திருத்தத் துறை உறுதிப்படுத்தியது.
கலிபோர்னியாவின் திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத் துறையானது, அதிகாரிகளின் பேரிடர் பதிலை ஆதரிக்கும் சிறைக் கைதிகளுக்காக மாநிலம் முழுவதும் தீயணைப்புப் பயிற்சி முகாம்களை நடத்துகிறது.
வேண்டுமென்றே தீப்பிடித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் விசாரணைகள் நடந்து வருகின்றன.