திருப்பதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஒரு துணை பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும் ஆந்திர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆயலத்தை நடத்தும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானம், 10 நாட்கள் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சிறப்பு தரிசனத்திற்காக அனுமதித் சீட்டுக்களை வழங்க சுமார் 90 இடங்களில் கருமபீடங்களை அமைத்துள்ளது.
புதன்கிழமை (08) வைகுண்ட ஏகதாசி நுழைவுச் சீட்னை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்தியில் கூடினர்.
இதன்போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிந்ததுடன், 40 பக்தர்கள் காயமடைந்தும் இருந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் இந்திய ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.