டொனால்டு டிரம்ப் கூறுவது ஒருபோதும் நடக்காது – கனேடியப் பிரதமர்

by 9vbzz1

அமெரிக்காவின் 51-வது மாகாணமாக, கனடா இணையலாம் என்று அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். அமெரிக்கா உடன் இணைவதை கனடா மக்களே விரும்புவார்கள் எனக்கூறிய டிரம்ப், வரிகள் குறையும், வர்த்தக பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும். அத்துடன், அமெரிக்கா பெரிய தேசமாக மாறும். ஒன்றிணைவோம் என கூறியிருந்தார்.

அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா மாறும் வாய்ப்பே இல்லை என்று டிரம்பின் கருத்துக்கு கனேடிப் பிரதமர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:- 

டொனால்டு டிரம்ப் கூறுவது ஒருபோதும் நடக்க போவது இல்லை. கனடா மக்கள் கனடா குடிமக்களாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறார்கள். நாங்கள் அமெரிக்கர்கள் இல்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் டிரம்ப் இவ்வாறு பேசி வருவதாக நான் கருதுகிறேன் அவர் மேலும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்