5
அஹுங்கல்ல பகுதியில் நேற்று (09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அஹுங்கல்ல பொலதுகந்த பகுதியில் வைத்து நேற்றிரவு குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6.15 மணியளவில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.