by 9vbzz1

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தோா் தம் முடிவை மீள்பரிசிலனை செய்ய வேண்டும் – சி.வி.கே. சிவஞானம் தெற்கத்தைய தலைமத்துவ பிரதிநிதித்துவத்திற்கு வாக்களித்தவர்கள் தங்கள் முடிவுகளை மீள்பரிசிலினை செய்து எதிா் காலத்தில் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவரும் வட மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின்  51 வது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் உலக தமிழராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவுதூபியில் இடம்பெற்றது. நினைவேந்தலில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது தமிழ்மக்கள் சூழலில் வாழ்கிறார்கள் என்பதை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எதற்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் கொலை செய்யப்பட்டன? காணாமல் ஆக்கப்பட்டன? ஏதற்கான நினைவு தினங்கள் செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாறுகளை மறக்க கூடாது.

இந்த  மண்ணில் தமிழர்களுக்கான  ஆராய்ச்சி மாநாட்டு தமிழர் நிலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் அன்றைய அரசாங்கம் தெளிவாக இருந்தது. அதை எதிர்த்துத்து தான் தமிழர் ஆராட்சி  மாநாடு இங்கு நடந்தது. இன்று தெற்கத்தைய ஆதிக்கம் தமிழர் விரோத செயற்பாடு மிகத் தெளிவாக இடம் பெறுகின்றது. அதில் நாங்களும் எங்களுடைய மக்களும் திசை மாறிப் போகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இறுதியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிக அதிர்ச்சி ஊட்டும் வகையில் தெற்கத்தைய தலைமைகளை பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். இது எங்களுடைய வரலாற்றை புரிந்து கொள்ளாத நிலையில் ஏற்பட்டது.

ஏங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் சரி தலைமைத்துவம் எங்கள் மக்களுடைய பிரதிநிதித்துவம் எங்களுடைய தலைமைத்துவமாக இருக்கவேண்டுமே தவிர தெற்கத்தைய தலைமைத்துவத்துக்குட்பட்டதாக இருக்க முடியாது. தமிழ் மக்கள் மீதான மேசமான நடவடிக்கைகள் காராணமாகத்தான்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தப்பட்டது. அதுவும்  அரசாங்கத்தை எதிர்த்துத்தான் இந்த ஆராய்சி மாநாடு நடாத்தப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற தாக்குதல் தான் தமிழ் மக்களுடைய தற்காப்பு போராட்டத்திற்கு வித்திட்டது. இதற்குப் பின்னால் தான் ஆயுதப் போராட்டங்கள் பரிணமித்தது இதை எல்லாவற்றையும் எமது மக்கள் நினைவில் கொள்ளவேண்டும்.இனிமேலும் தெற்கத்தைய தலைமைத்துவத்துக்குப் போகாது தமிழ் தலைமைத்துவத்துக்குள் அது எதுவானாலும் அவர்களை ஆதரரிக்கவேண்டும் தெற்கத்தைய தலைமைத்துவத்துக்கு வாக்களித்தவர்கள் மீள்பரிசீலனை செய்து இனிமேல் வருகின்ற தேர்தல்களுக்கு தமிழ்த் தேசியத்திற்கு பலமாக நிற்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். எத்தகைய பாதக செயல்களுக்குள் நாங்கள் வாழ்கின்றோம் என்பதை மக்கள் உணரவேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்