by 9vbzz1

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தவர்கள் பழிவாங்கப்படும் ஆபத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கிராமப்புற மற்றும் சாதாரண மக்கள் அணுகமுடியாமல் உள்ள சட்டங்களை அமுல்படுத்துகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்  இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான “தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்தல் 2025 – 2029 நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

இதன் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பொலிஸ் நிலையங்கள் அரச திணைக்கள மட்டத்தில் செய்யப்படும் லஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் சரியான முறையில் விசாரணை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க விசேட குழுங்கள் இல்லை

புகார் அளித்தவர்கள் பழிவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் போதிய ஆளணி இல்லை தொழில்நுட்ப ஆதரவு பற்றாமை காரணமாக ஊழலை ஒழிக்க முடியாது. எனவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து இலங்கை முழுவதும் ஊழலை ஒழிக்க விசேட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்