by 9vbzz1

மேல்மாகாண அரசியல்வாதிகள் சுயேட்சையாக போட்டியிட தீர்மானம் மேல்மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகள் குழுவொன்று, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகளின் கீழ் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே சுயேட்சைக் குழுவாக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்த குழுவில், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

அண்மையில், இக்குழுவினர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகவும் அதில், அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிடாமல் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்கு வி்சேடமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்