by 9vbzz1

ஆசிரியர் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன ஆசிரியர் கல்லூரிகளின் இறுதி பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடநெறிகளுக்கான பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும், மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று (09) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic க்கு பிரவேசித்து வழங்கப்பட்ட பயனர் பெயர்  மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்