மாற்றம்:பொங்கலிற்கு அரிசியில்லை!

by sakana1

மாற்றம் தோற்றுவிக்கப்போ

வதாக பேசி ஆட்சிக்கு வந்திருந்த அனுர அரசு ஓராண்டினுள்ளேயே அரிசிக்காக திண்டாட தொடங்கியுள்ளது.

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை நகரில் வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (10) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.

வர்த்தகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நகர வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், அதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் தைப்பொங்கல் வருகிறது. அதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகிறது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது.

கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுகின்றனர்.

போக்குவரத்து கட்டணம், சுமை கூலி என பல விடயங்கள் இருப்பதால் கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்