பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படமாட்டார் – போலந்து அரசாங்கம் உதிறுயளிப்பு!

by 9vbzz1

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்தாலும் இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட மாட்டார் என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வாரண்ட் இருந்தபோதிலும், Auschwitz-Birkenau மரண முகாம் விடுவிக்கப்பட்டதன் 80வது ஆண்டு விழாவில் அவர் கலந்துகொண்டால் அவர் கைது செய்யப்படமாட்டார் என போலந்து அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா, எதிர்கட்சியான சட்டம் மற்றும் நீதிக் கட்சியைச் சேர்ந்த (பிஐஎஸ்) இந்த வாரம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி நெதன்யாகு ஜனவரி 27 ஆம் திகதி ஆஷ்விட்ஸ் நினைவேந்தலில் கலந்து கொள்ள முடிவு செய்தால் அவரை கைது செய்ய வேண்டாம் என்று கோரியதாக ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிரதம மந்திரி டொனால்ட் டஸ்கின் அலுவலகம் நேற்று வியாழனன்று ஒரு தீர்மானத்தை வெளியிட்டது. இது நினைவு நிகழ்வுகளில் இஸ்ரேல் தலைவர்களின் பாதுகாப்பான பங்கேற்பை உறுதி செய்யும்.

அது பிரதமராக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி  ஒஸ்விசிமுக்கு வருபவர்கள் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்படுவார்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என டஸ்க் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்