துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம் கொள்கலன்கள் !

by 9vbzz1

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம் கொள்கலன்கள் ! on Friday, January 10, 2025

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 800-1000 துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் நிலவும் குறைபாடுகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (9) ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

இதற்கிடையில், கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 20% அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்