சிறைச்சாலை கைதிக்கு போதைப்பொருளை கொண்டு சென்ற இளைஞனுக்கு ஆயுள் தண்டனை ! on Friday, January 10, 2025
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருளை கொண்டு சென்றதாக கூறப்படும் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் 26 வயதுடைய இளைஞன் ஒருவன் ஆவார்.
இந்த இளைஞன் 2019 ஆம் ஆண்டில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு உணவுப் பொதியில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற போது சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த இளைஞனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இளைஞனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.