2
கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானதாகும். அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் இல்லை.
அத்துடன் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கொரியா மற்றும் பாகிஸ்தான நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை என திருத்தப்பட்டிருக்கிறது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.