இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது. சரியான முறையிலே சர்வதேச உறவுகளை பேணாமலும், முதலீடுகளை சரியான திட்டங்களிலே முதலிடாமலும் இந்த நாடு மிகவும் வங்குரோத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றபோது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தொடர்ந்தும் தனதுரையில் தெரிவித்தவை வருமாறு,
2024 ஆம் ஆண்டு நிதி பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமான மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக அந்த சந்தர்ப்பத்தை தந்தற்காக பிரதி சபாநாயகர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையை கட்டி எழுப்ப வேண்டிய கடமைப்பாடுகள் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது. இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றது. சரியான முறையிலே சர்வதேச உறவுகளை பேணாமலும், முதலீடுகளை சரியான திட்டங்களிலே முதலிடாமலும் இந்த நாடு மிகவும் வங்குரோத்தான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. அது மட்டுமல்ல இலங்கையிலே 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பார்த்தால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட ஐந்து வீதமாக காணப்பட்டது. அதேபோல் அந்த இலங்கையில் மிகவும் முக்கியமாக இருக்கின்ற துறையான விவசாயத்துறையின் வளர்ச்சி வீதமானது 1.4 வீதமாக காணப்பட்டது.
அதேபோல், இன்டஸ்றீ கிரவுத் 11.4% ஆக இருந்தது. சேர்விஸ் கிரவுத் 2.6 வீதமாக காணப்பட்டது. பண வீக்கமானது எதிர்க்கணியத்திலே 0.5 % ஆக காணப்பட்டது. மற்றும், உணவு வீக்கமானது 3.3 வீதமாகவும் ஏற்றுமதி 6.1 வீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது. வெளிநாட்டு வருமானம் 11 வீதமாக காணப்பட்டது, சுற்றுலாத் துறையை நோக்கும்போது, 66.1 வீதமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை 50% ஆகவும் காணப்பட்டது.
அரச நிதி முகாமைத்துவம் 41.6% ஆக காணப்பட்டது. இங்கே குறிப்பாகச் சொல்லப்போனால் இந்த வீதங்கள் அதிகரித்தும் மறைப்பெறுமதியிலும் நேர்பெறுமதியிலும் காணப்பட்டாலும் அப்போது இந்த நாடு ஸ்தீரத்தன்மை அற்ற நிலையிலே காணப்படவில்லை.
இதற்கு இந்த நாட்டிலே இருக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கின்ற வடிவமைப்பாளர்களினாலே இப்போதுள்ள ஆட்சியாளர்கள் சரியாக திட்டமிடப்பட்ட முறையிலே பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து சரியான வழிகாட்டல்களின் ஊடாக, வருகின்ற நிதிகளை சரியான முறையிலே
முகாமைத்துவப்படுத்துகின்ற பொழுதுதான் இந்த நாட்டை நாங்கள் சிறப்பாக கட்டியெழுப்ப முடியும்.
உதாரணமாக விவசாயத் துறை வளர்ச்சி 1.4 % ஆக காணப்பட்டிருந்தது.விவசாயத்துறையில் இந்த வீதம் என்பது அதிகரித்து இருந்தாலும் இன்று இந்த நாட்டிலே அரிசியை இறக்குமதி செய்கின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் நாங்கள் தள்ளப்பட்டு இருக்கின்றோம். எத்தனையோ வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது விவசாயத்துறையை புதிய புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய உற்பத்திகளை அதிகரித்து வருகின்றார்கள். ஆனால் இலங்கை ஒரு விவசாய நாடாக இருந்தும் கூட சரியான முறையிலே தொழில்நுட்பங்களை உட்படுத்தாமல் செயல் திட்டங்களை சரியான முறையில் வகுக்காமல் அதற்கான வளங்களை ஒதுக்காமல் இருப்பதினால் தான் இன்று இந்த நாடு இன்னொரு நாட்டிலே அரிசி தேவைக்காக உணவு தேவைக்காக கையேந்துகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் இங்கு எத்தனையோ வளங்கள் இருக்கின்றன. விவசாயத்துறையை வளர்ச்சி அடையச் செய்வதற்கான முழு வளங்களும் இருக்கின்றது. அதேபோல் இந்த நாட்டை சுற்றி அதிகளவான கடல் வளங்கள் இருக்கின்றன. இந்த வளங்களை நாங்கள் சரியான முறையிலே பயன்படுத்துவதில்லை. அண்மையிலே குறிப்பிட்ட ஆறு மாசத்துக்கு முதல் எங்களது அயல்நாடு, அயல்நாட்டினாலே ஜெமேக்காவிலே கடல் வளங்கள் சார்வான ஆய்வுகளை மேற்கொள்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் அந்த திட்டத்தின் கீழே ஜெமேக்காவில் இருக்கின்ற தலைமையகத்திலே எங்களது கடல், இங்கே, இந்த இலங்கையில் இருந்து நான் நினைக்கின்றேன் 1050 கிலோ மீட்டருக்கு அப்பாற்பட்ட அப்பாலே காணப்படுகின்ற கடல் படுக்கையிலே அங்கே, அதிகளவான வளங்கள் மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்பட்டிருந்தது. அந்த வளங்கள் நான் நினைக்கிறேன் எதிர்காலத்திலே இந்த உலகத்துக்கே தேவையான மிக அரிதான வளங்கள் அந்த இலங்கைக்கே சொந்தமான நிலப்பரப்பிலே காணப்பட்டிருந்தது, யுரேனியம் லித்தியம் போன்ற பெறுமதி வாய்ந்த வளங்கள் காணப்பட்டிருந்தது. அந்த வளங்களை ஆராய்ச்சி செய்வதற்காக பிற நாடுகளிலிருந்து வல்லரசுக்கள், பிற நாடுகளில் இருக்கின்ற பிராந்திய வல்லரசுக்கள் அதே போல் உலக வல்லரசுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்கின்ற, ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்த வளத்தை சரியான முறையிலே நாங்கள் பயன்படுத்துவோமானால் இந்த நாடு உச்சம் அடைகின்ற, உச்ச பொருளாதாரத்திலே செல்வச் செழிப்பிலே இருக்கின்ற ஒரு நாடாக இருக்கின்றது இலங்கையில் இருந்து 1050 கிலோமீட்டர்க்கு அங்காலும் அதேபோல் மாலைதீவிலே இருந்து 1375 கிலோமீட்டருக்க அங்காலும் அதேபோல் இந்தியாவிலிருந்து 1600 கிலோமீட்டருக்க அப்பாலும் அந்த கனிய வளம் அந்த வளம் பரந்து காணப்படுகின்றது. அந்த திட்டுக்களாக காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 165 சதுர கிலோமீட்டர் பரப்பிலே அந்த திட்டுக்கள் காணப்படுகின்றது. அந்த வளங்களை கொள்ளையடிப்பதற்காக அந்த வளங்களை பெறுவதற்காக பல நாடுகள் பல தரப்பிலும் பல முயற்சிகளை செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால் அண்மையிலே ஐக்கிய நாடுகள் சபையில், ஜெமேக்காவில் இருக்கின்ற அந்த தலைமை காரியாலயத்திலே அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையானது, ஜெமேக்காவில் இருக்கின்ற அந்த தலைமையகமானது, அந்த மண் திட்டானது, வளங்களானது இலங்கைக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு இருந்தது, ஆகவே சரியான முறையிலே, சரியாக அந்த வளங்களை நாங்கள் பயன்படுத்துவோமானால் இலங்கைக்கு தேவையான அனைத்து பொருளாதார வசதிகளையும்,அனைத்து செல்வங்களையும் நாங்கள் இந்த இந்த இலங்கைக்கு பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் இலங்கையை சுற்றி அதிகளவான வளங்கள் இருக்கின்றது. அந்த வளங்களை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நாங்கள் விவசாயத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல எங்களது பொருளாதாரத்திலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது யானையின் உள்வருகையாகும்.
யானை கிராமத்துக்குள்ளே வருகின்றபொழுது அதிகளவான மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். எனவே முறையான திட்டமிடலின் மூலம் யானைகள் கிராமங்களுக்குள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு துறை சார்ந்தவர்களும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.