கம்பஹா மாவட்டம் பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (08) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கோடா உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொட்டுகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடா உற்பத்தி செய்யப்படுவதாக பெம்முல்ல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 31,140 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தப்பிச்சென்ற சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பெம்முல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.