குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி?
குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி?
“கடலில் குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது, என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது.” என்கிறார், யுக்ரேனை சேர்ந்த ஸ்விட்லானா.
ரஷ்யா போர் தொடங்கியவுடன் அயர்லாந்துக்கு தப்பித்து வந்தார். 2022-ல் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
“எதுவுமே சாப்பிட முடியாது. வாந்தி எடுத்துவிடுவேன். உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் மன அழுத்தம் இருந்தது. என் குழந்தைக்காக தொடர்ந்து பயணித்தேன்.” என கூறுகிறார் அவர்.
அவரை, குளிர்ந்த நீரில் நீச்சலடிக்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். குளிர்ந்த நீரில் நீச்சலடிப்பது அவருடைய மனநலனை மேம்படுத்தியுள்ளது. எப்படி என்பதை அவரே விளக்குகிறார்.
“அப்படி நீச்சலடிப்பவர்களை நான் பார்த்துள்ளேன். தண்ணீரில் இருந்து ஹீரோ போன்று வெளியே வருவார்கள். குளிர்ந்த நீரில் நீச்சலடிக்க தைரியம் வேண்டும். ஒருநாள் நாங்கள் கடற்கரை சென்றோம். நீச்சல் உடையை அணிந்துகொண்டு கடலில் இறங்கினேன். இறங்கியதும் ஆச்சர்யமாக இருந்தது. என் உடலில் வலி இருந்தது, ஆனால் கடலில் இறங்கியதும் இதமாக இருந்தது.”
குறுகிய நேரம் குளிர்ந்த நீரில் மூழ்குவது உடல், மன நலனை மேம்படுத்தும். மன அழுத்த ஹார்மோன்களை விடுவிப்பதுடன் இது தொடர்புடையது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“இது மன நலனை மேம்படுத்தியது, நம்பிக்கையும் தந்தது. எப்படி என தெரியவில்லை, ஆனால் இது வேலை செய்கிறது,” என்கிறார் ஸ்விட்லானா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு