இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை தூய்மைப்படுத்துங்கள் பொது போக்குவரத்து துறையை தூய்மைப்படுத்த வேண்டுமாயின் முதலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை தூய்மைப்படுத்த வேண்டும். க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பொது மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தாத வகையில் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் மக்கள் மாற்றமடைவார்கள். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.