நாட்டில் HMPV தொற்றுகள் பதிவாகவில்லை !

by smngrx01

on Thursday, January 09, 2025

சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் எச்எம்பிவி தொற்றுகள் எவையும் அண்மையில் கண்டறியப்படவில்லை எனக் கூறிய சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சு இவ்விடயம் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டால் மக்களுக்கு அறிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இருபது இடங்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொற்று நோய் தடுப்புப் பிரிவு தொடர்ந்தும் சுகாதார அமைச்சுக்கு வைரஸ் தொடர்பான விவரங்களை வழங்கி வருவதாகவும், ஜனாதிபதியும் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான ஒரு வழக்கு பதிவாகியது, ஆனால் சோதனையை மேற்கொண்ட போது எதிர்மறையான முடிவே வந்தது என்று அமைச்சர் கூறினார்.

சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் HMPV நோய் கண்டறியப்பட்டதாக கூறிய நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் நீலிகா மாளவிகேவின் கருத்தை சில ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாகவும், உணர்ச்சிகரமான விடயங்களைப் அறிக்கையிடும் போது ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்

தொடர்புடைய செய்திகள்