5
அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) முடிவடைகிறது.
தற்போதைய அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, நேற்று (08) நண்பகல் 12 மணி நிலவரப்படி சுங்கத் திணைக்களத்தின் அனுமதியூடாக இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 115,000 மெற்றிக் தொன்னைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 45,000 தொன் பழுப்பு அரிசியும், 70,000 தொன் புழுங்கல் அரிசியும் அடங்குவதாக கூறப்படுகிறது.
எவ்வாறெனினும், அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி மீண்டும் நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.