மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு !

by guasw2

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு ! on Wednesday, January 08, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடைந்துள்ளது.

ரஷ்யா மற்றும் OPEC உறுப்பு நாடுகள் தங்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.67 டொலராகவும் அதிகரித்தது.

OPEC நாடுகள் கடந்த டிசம்பர் மற்றும் கடந்த மாதம் தங்கள் உற்பத்தி திறனை குறைத்துள்ளன.

ரஷ்யாவும் தினசரி மசகு எண்ணெய் உற்பத்தியை 8.971 மில்லியன் பீப்பாய்களாக குறைக்க நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, அந்த மாதத்தில் நாட்டின் தினசரி மசகு எண்ணெய் உற்பத்தி திறன் 9.5 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.

இத்தகைய பின்னணியில், 2025இல் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 76 டொலராக குறைவடைய வாய்ப்புகள் உள்ளதாக துறைசார் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்