97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

by smngrx01

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயதான பொசுனியா பிரஜை ஒருவர் இன்று (08) காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொலம்பியாவில் இருந்து போதைப்பொருள் கையிருப்புடன் கட்டாரின் தோஹாவுக்கு பயணித்துள்ளார்.

அங்கிருந்து இன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பொசுனியா பிரஜையுடன் கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்