2
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் சங்கத்தினருக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.