பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சென்ற பேருந்து சாரதி நடத்துனர் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை ! on Wednesday, January 08, 2025
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பொலிஸார் குற்றம்சாட்டியதை தொடர்ந்து பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சென்ற பேருந்து சாரதி நடத்துனர் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக பொலிஸார் நடவடிக்கை எடுக்கமுயன்றவேளை பாணந்துறை புறக்கோட்டை 100 இலக்க பேருந்தின் சாரதி பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மேல்மாகாண வீதி பயணி போக்குவரத்து அதிகாரசபை 15ம் திகதி வரை குறிப்பிட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பணியில் ஈடுபடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.அதேவேளை இருவருக்கு எதிராக அபராதத்தையும் விதித்துள்ளது.
இருவரும் இந்த காலப்பகுதியில் வேறு பேருந்தில் பணிபுரிந்தால் அந்த பேருந்தின் உரிமத்தை இரத்துசெய்யநேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இருவரையும் 21ம் திகதி பயிற்சியொன்றில் கலந்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.