by guasw2

நுவரெலியா வைத்தியசாலையில் தரமற்ற மருந்து பயன்பாட்டினால்  கண் பார்வை பாதிப்புக்குள்ளான   17 பேருக்கு  நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (07)  இடம்பெற்ற வாய்மூல விடைக் காண  வினா நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்த   அவர் மேலும் கூறுகையில்,

மருந்து விநியோக கட்டமைப்பை  வினைத்திறனாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  தேசிய மருந்தக ஆராய்ச்சியகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்து விநியோகம் தொடர்பில்  கிடப்பில் இருந்த  2100 கோப்புக்களில் 1200 கோப்புக்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன

12 நோயாளர்களுக்கு 1,000,000 -ரூபாய் வீதம் இழப்பீடு செலுத்தல், 02 நோயாளர்களுக்கு 750,000 ரூபாயட வீதம் இழப்பீடு செலுத்தல்

ஒரு நோயாளிக்கு 700,000 ரூபாய் இழப்பீடு செலுத்தல் மற்றும் 02 நோயாளர்களுக்கு 250,000 ரூபாய் வீதம் இழப்பீடு செலுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்