படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொலைச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர், லசந்த மரணித்து 16 வருடங்களுக்குள் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எவருக்கும் ஆர்வம் இருந்திருக்கவில்லையெனனவும் அவர் தெரிவிததுள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் மரணம் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய வழக்குகளையும் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றுமாறு எமது சட்டத்தரணி கோரினார். பின்னர் அது ஷசானி அபேசேகர பணியில் இருந்த சமயத்தில் வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
“சிஐடி நடத்திய விசாரணையில், கொலையில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அறியும் அளவிற்கு கூட, மரணம் தொடர்பான பல முக்கிய உண்மைகள் வெளிவந்தன,” என்று அவர் கூறினார்.
அனுர அரசாங்கத்தின் கீழ், சானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குத் திரும்பியுள்ள நிலையில், புதிய விசாரணைகள் தேவையில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதே எஞ்சியுள்ளதாகவும் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்கள் இந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 16வது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.