யேர்மனியின் தென்மேற்கு மாநிலமான பாடன் வூட்டன்பேர்க் ( Baden-Württemberg) பகுதியல் இயந்திரம் கட்டும் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். காமடைந்தவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிகிற்சை வழங்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி நேற்று 5.45 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
ஸ்ருட்காட்டிலிருந்து வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட் பிரிட்டிஸ்சால் (Bad Friedrichshal என்ற நகரத்தில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் நிறுவனத்தின் வளாகத்திற்குள் நுழைந்த பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
சந்தேகநபரான கொலையாளியை பிடிப்பதற்காக உலங்குவானூர்தி வானில் நிலை நிறுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது. பின்னர் சந்தேகநபர் 30 கிலோ மீற்றர் வடக்கே உள்ள செகாச்சில் சிறப்புப் படைகளால் கைது செய்யட்டார்.
கொல்லப்பட்ட இருவரும் இயந்திரங்களுக்கான உயர் துல்லியமான பற்கள் மற்றும் கியர்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது மற்ற நிறுவன ஊழியர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.