கொழும்பு ஸாஹிரா கல்லூரி இஸ்லாமியச் சங்கம் ஒழுங்கு செய்த வருடாந்த மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரியின் கபூர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான எகிப்து தூதுவராலய பிரதித் தூதுவர் மொஹமட் இப்ராஹிம் மடி (Mohamed Ibrahim Mady)கலந்து கொண்டதுடன் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுத்தீன் கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
இதில் தலைமையுரையை ஸாஹிரா கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார் நிகழ்த்தியதுடன் பிரதம அதிதியும் உரையாற்றினார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சமய விவகார இணைப்பாளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.அப்துல் ஹலீம், கெளரவ அதியாக கலந்து கொண்ட கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுத்தீன் ஆகியோர்களும் உரையாற்றினர்.
அத்துடன் மெளலவி அல் ஆலிம் குலாம் முஹம்மட் அம்ஜாடி மீலாத் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரை நிகழ்தினர்.
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளின் கசீதாவும், குறூப் ஹசீதாவும் இடம்பெற்றன.
மீலாத் நபி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை அதிபர், அதிதிகள் வழங்கி வைத்தனர்.
இதில் மீலாத் போட்டிகளில் சுமார் 40 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்குபற்றியிருந்தனர்.
பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பம்பலப்பிடி முஸ்லிம் மகளிர் கல்லூரி சம்பியனாகியதுடன் கிண்ணத்தையும் தட்டிக்கொண்டது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கைக்கான எகிப்து தூதுவராலய பிரதித் தூதுவர் மொஹமட் இப்ராஹிம் மடி மற்றும் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுத்தீன் ஆகயோர்களுக்கு கல்லூரி அதிபர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.