பிரபஞ்சத்தின் 9 கர்ம விதிகள்!

by smngrx01

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களையும் பெறுகிறோம்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நான் நினைக்கத் தானே செய்தேன்.. செயல்படுத்தவில்லையே என்று சாக்குபோக்கு சொல்வது கர்மாவிடம் செல்லாது.

உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தவாறு மாறுவதற்கு, கர்மாவின் இந்த 9 விதிகள் என்னென்ன? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விதி 1

பிரபஞ்சம் நாம் செய்வதை கவனித்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கே திரும்பி வரும். நல்லது செய்தால் நல்லதும், கெட்டது செய்தால் கெட்டதும் ஏதாவது ஒரு வழியில் உங்களை வந்தடைந்தே தீரும். இதை மாற்றுவது என்பது இயலாது.

விதி 2

பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நடப்பது யாவும் அதுவாக நடப்பது கிடையாது. நாம் தான் நம் வாழ்க்கையில் தேவையானதை அடைய முன்னிறுத்தி நடத்திச் செல்ல வேண்டும். அதுவாக நடக்கும் என்று உட்கார்ந்து இருந்தால் எதுவும் மாறாது, விழித்துக் கொள்ளுங்கள்.

விதி 3

பிரபஞ்சத்தில் கர்மா எல்லாவற்றையும் உங்களுக்காக செய்யாது. சில விடயங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் மாற்றமும் வரும். இது எப்படி நடக்கலாம்? என்று கோபித்துக் கொள்வதை விட, நடப்பதெல்லாம் ஒரு காரணத்தோடு நடக்கிறது என்று ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.

விதி 4

யாரும் நம்மை மாற்ற முடியாது. நம்மை நாமே மாற்றிக் கொண்டால் தான் நம்முடைய வாழ்க்கையும், அதனை பின்பற்றி மாற ஆரம்பிக்கும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை உங்கள் வாழ்க்கையும் சலனமற்று கிடக்கும்.

விதி 5

பிரபஞ்சத்தில் யாரால் நமக்கு என்ன நடந்தாலும், அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். கர்மாவின் படி நமக்கு நடப்பவை யாவும் நம்மால் நடந்தவை ஆகும். நடந்தவற்றுக்கு பொறுப்பேற்க பழகுங்கள், விதி மாறும்.

விதி 6
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை! அதே போல கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் எதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை. நாம் யாரையும் காரணம் இன்றி சந்திப்பதும் இல்லை.

விதி 7

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்க முடியாது. உங்கள் சிந்தையில் வரும் எல்லாவற்றையும், மூளைக்கு கொண்டு சென்று சேமித்து வைக்காதீர்கள். எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறாதீர்கள். அலட்சியம் பெருந்துயரை தரும்.

விதி 8

நம் எண்ணங்களும், செயல்களும் தான் நம் நடத்தையில் தெரியும். நடத்தையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எண்ணங்களையும், செயல்களையும் சரியாக வழி நடத்துகிறோமா என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விதி 9

கடந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாவும் நமக்கானதாய் நில்லாமல் கடந்து சென்றுவிடும். கடந்த காலத்தை மாற்றும் சக்தி நமக்கில்லை. நிகழ் காலத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் நீங்கள் இப்போது விட்டதை பிடிக்க, முடங்கிப் போகாமல் முன்னேறி செல்லுங்கள் அதுவே அறிவாகும்.

தொடர்புடைய செய்திகள்