பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர்கள்!

by smngrx01

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கபடவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related

Tags: BusGemunu Wijeratneகெமுனு விஜேரத்னபஸ்

தொடர்புடைய செய்திகள்