தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!

by smngrx01

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: anewsathjavannewsExaminationlkscholarshipupdats

தொடர்புடைய செய்திகள்