இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளஇந்தியப் பிரதமர் மோடி ! on Wednesday, January 08, 2025
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது.
அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் ஆவார்.
இதற்கு முன்பு பிரதம் மோடி 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.