6
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இன்று (08) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித், மெதிரிகிரிய தம்ம தேரர், ரஷ்மிகா சாமோத் ரணசிங்க, உதார ரணசிங்க மற்றும் தருஷன் பியுமந்த ஹேரத் ஆகியோருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) விதிகளின் பிரகாரம் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.