7
அண்மையில் மியன்மாரிலிருந்து பழுதடைந்த படகில் வந்த அகதிகள் கூட முள்ளிவாய்க்கால் கரைக்கு வரும் வரை இலங்கை கடற்படைக்கு தெரியாது.அந்த அளவிற்கு இலங்கை கடற்படை நிலை உள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
‘வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழிலால் முற்றுமுழுதான அடக்குமுறைக்குள் மக்கள் அவதிப்படுகின்றார்கள். இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள இலட்சக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எமது நாட்டிற்குள் அந்நிய நாட்டுப் படகுகள் நுழைவதை கடற்படை தடுக்கவேண்டும். அவர்களால் முடியாவிட்டால் எமது கடற்றொழிலாளர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படையுங்கள்” என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.