‘Tell IGP’ சேவை மீண்டும் அறிமுகம்!

by adminDev2

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இலங்கை காவல்துறையினரால் ‘Tell IGP’ இணைய சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவையானது, பொலிஸ் சேவையைப் பற்றிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பொலிஸ்மா அதிபரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பினை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

www.police.lk என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ள இ-சேவை இணைப்பு மூலம் பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை பதிவு செய்து, ‘டெல் IGP’ ஐகானைத் தேர்ந்தெடுத்து, படிவத்தில் சரியான தகவல்களைப் பதிவு செய்து தங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம். (https://telligp.police.lk/)

24 மணிநேர சேவையான இந்தச் சேவையின் ஊடாக பொலிஸ் நிலையங்களில் தங்களின் முறைப்பாடுகள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என கருதுபவர்கள் தமது முறைப்பாடுகளை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்