by adminDev2

யாழில். இளைஞன் மீது தாக்குதல் – மேலும் மூவர் கைது யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்னிரவு இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் மூவர் இன்றையதினம் செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த குறித்த நபர்கள் யாழ் நகரில் நடமாடுவதாக யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் (31) இரவு வேளை ஒன்றுகூடிய இளைஞர்கள் குழுவினர் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டியதுடன் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியிருந்தனர்.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும் கைப்பற்றப்பட்டது.

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதான மூவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்