7
கோப் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவிற்கு (COPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஆர்கம் இல்யாஸ் ஆகியோர் புதிய COPF உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முன்னதாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.