2024 பொதுத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் கோப்புகளை இறுதி செய்து சட்ட நடவடிக்கைக்காக உடனடியாக பொலிஸாருக்கு அனுப்புமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், காலக்கெடு முடிந்த நிலையில் பல வேட்பாளர்கள் இன்னும் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையகம் கூறியுள்ளது.
இதேவேளை, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஏழு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.