8
வெளிநாடு செல்வதற்காக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது ! on Tuesday, January 07, 2025
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பல்கலைக்கழக மாணவன் வெளிநாடு செல்வதற்காக ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மாணவன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ” லலித் கன்னங்கர ”என்பவருக்குச் சொந்தமான ஐஸ் போதைப்பொருளை ஹங்வெல்ல, கொஸ்கம, பாதுக்க மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.