வருடத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று !

by 9vbzz1

வருடத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று ! on Tuesday, January 07, 2025

புதிய வருடத்தில் முதல் தடவையாக நாடாளுமன்றம் இன்று (07) கூடவுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.

2024 ஆம் ஆண்டின் மத்தியில் நிதி நிலை அறிக்கை தொடர்பான பேரவை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளதாக நாடாளுமன்றத் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளதுடன், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்குகள் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்