யாழில் பூட்சிற்றிகளுக்கு தண்டம்

by 9vbzz1

கோண்டாவில் பகுதியில் காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதிகளில் உள்ள பூட்சிற்றிகளில் வண்டுமொய்த்த, திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் குறித்த பூட்சிற்றிகள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பூட்சிற்றிகள் இனங்காணப்பட்டன. 

குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார். 

வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், இரு பூட்சிற்றி முகாமையாளர்களையும் கடுமையாக எச்சரித்து, 60 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தார்.

தொடர்புடைய செய்திகள்