பிரிக்ஸ் கூட்டமைப்பில் முழுமையாக இணைந்தது இந்தோனேசியா

by wamdiness

பிரிக்ஸ் ( BRICS ) கூட்டமைப்பில் இந்தோனேசியா 10வது முழு உறுப்பினராக நேற்று திங்கட்கிழமை சேர்ந்துள்ளது.

2025 ஆண்டு பிரிக்ஸின் தலைமைப் பொறுப்பை வைத்துள்ள பிரேசில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா நுழைவதை பிரேசில் அரசு வரவேற்கிறது என பிரேசில் தெரிவித்தது.

தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்துடன் இந்தோனேசியா நாடு இருக்கின்றது.

இந்தோனேஷியா மற்ற உறுப்பினர்களுடன் உலகளாவிய நிர்வாக நிறுவனங்களைச் சீர்திருத்துவதற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது. மற்றும் தெற்கு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு சாதகமான பங்களிப்பை வழங்குகிறது.

இந்தோனேசியாவின் வேட்புமனுவை ஆரம்பத்தில் பிரிக்ஸ் தலைவர்கள் ஆகஸ்ட் 2023 இல் ஆமோதித்தனர்.

ஆனால், உலகின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியா நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைக்கும் வரை பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கான அதன் முறையான அணுகலை ஒத்திவைத்தது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு 2009 ஆண்டு பிரேசில், ரஷ்யா , இந்தியா மற்றும் சீனா மற்றும்  தென்னாப்பிரிக்காவினால் உருவாக்கப்பட்டது. தென்னாபிரிக்கா ஒரு வருடம் கழித்து முழுமையாக இணைந்தது.

2024 ஆண்டு ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூட்டணி விரிவடைந்தது.

அமெரிக்கா, கனடா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஜி7 (G7) வளர்ந்த பொருளாதார நாடுகளுக்கு எதிர் அணியாக  இந்த கூட்டமைப்பு கருதப்பட்டது.

இந்தோனேஷியா இணைவதற்கு முன், BRICS உலக மக்கள்தொகையில் 46 விழுக்காட்டை இந்த நாடுகள் உள்ளடக்கின. அத்துடன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% ஆக இருந்தது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பார்வையாளராக இருக்கும் சவூதி அரேபியாவைச் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்றும் அந்த கூட்டமைப்பில் இணையவில்லை.

துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா ஆகியவை உறுப்பினர்களாக சேர முறையாக விண்ணப்பித்துள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டை ரஷ்ய அதிபர் புடின் தலைமையேற்று நடத்தினார்.

உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகள் உள்ளூர் நாணயங்களை வலுப்படுத்துவது மற்றும் டாலர் அல்லாத பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து விவாதித்தது.

இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு ஜூலை மாதம் பிரேசிலில் உ்ளள ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது.

டொலரை முற்றிலும் தவிர்த்து பிரிக்ஸ் நாடுகள் பண பரிமாற்றங்களை முன்னெடுத்தால் அந்த நாடுகள் மீது 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்