பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் !

by 9vbzz1

பாடசாலை அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் ! on Tuesday, January 07, 2025

(பாறுக் ஷிஹான்)

மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் அதிபரை பாடசாலையை விட்டு  வெளியேற்றுமாறு கோரி  பெற்றோர்கள் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

இப்போராட்டமானது சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது இஸ்மாயில் வித்தியாலயத்தின் முன்பாக   இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலை அதிபரின் செயற்பாடுகளை  எதிர்த்து பல்வேறு கோஷங்களுடன்  பெற்றோர்கள் பாடசாலை முன்னால்  ஒன்று கூடியதுடன் அங்கு சிறு  பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு வருகை தந்த   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர்  சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர்  பீ.எம்.வை. அறபாத் மற்றும் சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.எம். நாசிர் அலி ஆகியோர் இணைந்து   பெற்றோர்களுடன்   கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அத்துடன்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) மேற்குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய  தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்து  குறித்த போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம்  மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்